Thursday, December 20, 2012

வாருங்கள் பதிவர்களே! திருப்பூரில் சங்கமிக்கலாம்..

           திவுலகத் தோழர்களுக்கு வணக்கம்.பதிவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய மீண்டும் பதிவர்கள் சந்தித்து மகிழக்கூடிய ஒரு செய்தியோடு உங்களைச் சந்திப்பதில் மனமகிழ்கிறேன்.

         கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் ஒரு பிரம்மாண்ட பதிவர் சந்திப்பை நடத்தி முடிந்திருந்தோம் அல்லவா.அதன் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தது தொழிற்களம் என்பதை நாம் அறிவோம்.

        தொழிற்களம் நிறுவனம் பதிவர்களை சிறப்பான முறையிலே ஊக்குவித்து பலருக்கும் பயன்படும் பதிவுகளை பதிவர்களை எழுத வைத்துக்கொண்டிருப்பதையும் அறிவோம்.  கடந்த காலங்களில் எந்த ஒரு நிறுவனமும் பதிவர்களை இப்படி ஊக்குவித்ததா எனத் தெரியவில்லை என்பதைவிட இல்லையென்று சொல்லலாம்.பதிவர்களுக்காகவே மக்கள் சந்தை.காம் தொழிற்களம் என்றதொரு வலையை உருவாக்கி இருக்கிறார்கள்.அதில் பல பதிவர்கள் பல செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

        அவ்வப்போது பதிவர்களைப் பாராட்டி பரிசளித்து  அவர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு பல விழாக்களை நடத்தி வருகிறார்கள்.அந்த அருமையான செயலுக்கு பதிவர்கள் கட்டாயம் தங்களது பாராட்டுதல்களை தொழிற்களத்திற்கு தெரிக்க வேண்டும்.

       தொழிற்களம் இப்போது 'உறவோடு உறவாடுவோம்' என்ற தலைப்பில் டிசம்பர் 30 ம் நாள் மாபெரும் விழாவை நடத்த உள்ளது அவ்விழாவிற்கு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

    இந்த விழாவில் தமிழ் வலைப்பதிவர்கள் சங்கமமும் நடைபெறுகிறது.பதிவர்கள் ஒன்று கூடும் கருத்தரங்கமும் நடக்கவிருக்கிறது.ஏற்கனவே பதிவுலகத்திற்கு தொழிற்களத்தின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.இருப்பினும் இறுதியழைப்பை பதிர்வர்களுக்கு கொடுக்கவும் தொழிற்களம் விரும்புகிறது.விரைவில் அழைப்பு உங்களுக்கு வந்து சேரும்.

       இவ்விழாவில் கலந்துகொள்ளும் பதிவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்து கொண்டால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வசதியாயிருக்கும்.வருகையை உறுதி செய்த பதிவர்களுக்கு முன்னதாக இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும்.எனவே  டிச 30 விழாவில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துகொள்ளுங்கள்.இதுவரை 30 பதிவர்கள் வருகையை உறுதி படுத்தியுள்ளனர்.திங்கட் கிழமை தங்கள் வருகையை உறுதி செய்த பதிவர்களின் பட்டியல் வெளியிடப்படும்..

நன்றி!

அன்புடன் மதுமதி

வரவேற்புக்குழு:

சீனு
கண்மணி
என் ராஜபாட்டை ராஜா
செழியன்

கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் மக்கள் சந்தை.காம் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்கள் உரையாடிய காணொளி


கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் மக்கள் சந்தை.காம் நிர்வாக இயக்குனர் தோழர் அருண் அவர்கள் உரையாடிய காணொளி

.
உறவோடு உறவாடுவோம் விழா குறித்த மேலான தகவல்களைக் காண இங்கே செல்லுங்கள்.

7 comments:

 1. எனது பணிவான வணக்கம் முதலில்.

  ஆஹா..அருமையான தலைப்பு...
  'உறவோடு உறவாடுவோம்' உறவு என்பது பொதுவாக ரத்த சம்மந்தம் அல்லது சம்மந்தப்பட்டோரின் உறவுகள் இதைத்தான் சொல்வோம்...

  ஆனால் கண்ணால் பார்த்திராத தமிழால் மட்டுமே இணைந்து வலைத்தளத்தின் வாயிலாக பழகி அப்படியே சென்றுவிடாமல் நாம் அனைவரும் ஒன்றாக கண்ணால் கண்டு ஒன்றாக இணைவதற்கு இந்த விழா பெரிதும் ஒரு பாலமாக அமையும் என்பது நம் எல்லோருக்கும் பெரிய வரப்பிரசாதமாகும்.

  திருப்பூரில் சந்திப்போம் சிந்திப்போம் உடன் பிறவா உறவுகளே உடன் பிறப்பையும் விஞ்சுவோம் அன்பாலும் பாசத்தாலும் ஒருவருக்கு ஒருவரை...
  உறவென்றால் என்ன என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்துவோம்...

  நானும் இந்த விழாவில் கலந்து கொள்கிறேன் என்பதை இதன் மூலம் உறுதியும் செய்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தலைவரே..உங்கள் வருகையை பின்னூட்டம் மூலமாகவே உறுதி செய்துவிட்டீர்களா மகிழ்ச்சி..30 ல் சந்திப்போம்..

   Delete
 2. கண்டிப்பாக அண்ணா, உறவாடுவோம்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் செழியன்..

   Delete
  2. மதுமதி அண்ணா, உங்களுக்கு ஒரு குறுஞ் செய்தி சில நாட்களுக்கு முன் அனுப்பினேன். பார்த்தீர்களா? உங்களை தொடர்பு கொள்ள ஏதுவான நேரம் எது ?

   Delete
 3. வருகை தர முயற்சிக்கின்றேன் தோழரே.....

  ReplyDelete
 4. தாங்கள் குறித்த அந்நாளில் தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சி நடைபெற்றது. அங்குச் செல்ல வேண்டியதாயிற்று. தாங்கள் ஏற்பாடு செய்திருந்தது ஞாயிறு என்ற போதிலும் மாநாட்டுக் கண்காட்சியையும் கவனத்தில் கொண்டிருக்கலாம். என்னால் வர முடியாமல் போனது.

  ReplyDelete

உங்கள் ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவியுங்கள் நண்பர்களே!!

உங்களின் ஒவ்வொரு உற்சாகமும் தான் நம்மை மேலும் வேகமாக உந்திச்செல்லும் சக்தியாக இருக்கிறது...