விழா நோக்கம்

வணக்கம்!
இன்றைய நாள் டிசம்பர் மாதம் 2012.

"  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
  நம்மில் ஒன்றுமை நீங்கில்
  அனைவருக்கும் தாழ்வு " 

          இன்று நாம் காணப்போகும் இவ்விழாவானது  "தமிழ் உறவோடு உறவாடுவோம்"    என்னும்  புது சிந்தனையின் அறிமுகத்திற்கான துவக்க விழா ஆகும்.

மக்கள் சந்தை.காம் இணையத்தின் தொழிற்களம் மின் இதழ்  மற்றும் தமிழ் மீட்சி இயக்கம் இணைந்து திருப்பூர் மாநகரில் " உறவோடு உறவாடுவோம் " என்ற தலைப்பில் தமிழ் உறவுகளை ஒரு களத்தில் குவிக்க இவ்விழாவை எதிர்கொள்கின்றது.

நோக்கம் ஒன்றாகியதால் இவ்விழாவை ஒரு நல்ல கருத்தரங்க மேடையாக உருவாக்கி வருகின்றோம். 

பல அமைப்புகளை சார்ந்த நண்பர்களும் இந்த நோக்கத்திற்கு ஆதரவளித்து, தங்கள் ஆற்றல்களையும் உடன் அளித்து வருகின்றனர்.

இவ்விழாவின் முக்கிய நோக்கம் : 

"  ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க  நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள் என்ற சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்."

       இதில் தொழிற்களம், தமீழ் மீட்சி இயக்கம்  போன்ற இன்னும் பல அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன.

  நிகழ்ச்சி அமைப்பு : 

நாள்      :  டிசம்பர் 30, 2012 ஞாயிற்று கிழமை 
நேரம்   :   மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 
இடம்   :   திருப்பூர் குமார் நகர், 
                 ஶ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபம், 


நிகழ்ச்சி நிரல் : 

சரியாக மதியம் 2.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது

2.30  -   :   தமிழ்த்தாய் வாழ்த்து
            :  வரவேற்புரை
2.45  -   :   துவக்கவுரை ( விழாவின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து)

3.00  -   : கருத்தரங்கம் 
         
தலைப்புகள் :

குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பார்வைகள்:

1. தனி மனித ஒழுக்கம்,
2. இலஞ்சம், ஊழல், சாதி, மத வேறுபாடுகளைக் களையெடுத்தல்
3. தமிழன் என்ற அடையாளத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும்
4. சிறந்த தொழில்முனைவோனாக உருவாக தகுதிகளை வளர்க்கும் விதம்
5. தொழில்நுட்பத்தின் உதவியை சரியாக பயன்படுத்துதல் உடன் இயற்கையை நேசித்தல்


என்ற தலைப்புகளின் கீழ் விபரங்களை தொகுத்து ஒரு சுவையான கருத்தரங்கம் உங்களுடனும், உடன் "தாய் தமிழ் பள்ளியை" சேர்ந்த மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சியையும் அரங்கேற்ற உள்ளோம்.

அதைத்தொடர்ந்து இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்

திரு. உ.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் 
மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியாளர்

தன் கரங்களால் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவ செல்வங்களை பாராட்டி சிறப்புரையாற்றுகிறார்.




மாதிரி வடிவம்


11 comments:

  1. அன்பின் தொழிற்களம் நண்பர்களே ! விழா வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. மதிப்புக்குரிய அய்யா உங்கள் உற்சாகம் எம்மை இன்னும் ஒரு படி மேலே செல்ல தூண்டி விடுகிறது...

    உங்கள் ஆதரவும், வழிகாட்டுதலும் எம் இளைஞர்களுக்கு தொடர்ந்து தேவை,,,

    ReplyDelete
  3. மரியாதைக்குரிய தொழிற்களம் குழுவினருக்கு அன்பன் பரமேஸ் டிரைவர் ஆகிய எனது வணக்கங்கள் பல. தங்களது விழா இனிதே நடைபெற எனது அன்பான வாழ்த்துக்கள்.எனக்கு வாய்ப்புக்கிடைத்தால் அவசியம் கலந்துகொள்வேன்.அனுமதி இல்லையேல் வெளியில் ஓரமாக ஒதுங்கியாவது விழாவினை,வினையாக ரசிப்பேன்.நன்றிங்க!என PARAMES DRIVER - THALAVADY-SATHYAMANGALAM-ERODE Dt.

    ReplyDelete
  4. விழாவும்,தொழிற்களத்தின் நோக்கமும் சிறப்புடன் வெற்றி பெற என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.--அன்புடன் கோ.சுரேந்திரபாபு சென்னை.http://shortfilmsurendrababu.blogspot.com

    ReplyDelete

  5. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தங்களைப் போன்ற சக நண்பர்களின் வாழ்த்து நிச்சயம் நம்மை உற்சாகப்படுத்துகிறது..
    மிக்க நன்றி!!

    மறக்காமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம்!!

    ReplyDelete
  7. நோக்கம் ஈடேற எல்லாம் வல்ல அந்த இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்!

    ReplyDelete
  8. விழா சிறக்க வாழ்த்துகள்..!

    விழாவிற்கு தலைமையேற்கும் மதிப்பு மிகு.. மாண்புமிகு திரு.உ.சகாயம் அவர்கள் பங்களிப்பது என்பது விழாவிற்கு மகுடம் சேர்ப்பது போன்றது. அவர் விழாவில் கலந்துகொள்வதால் தொழிற்கள நண்பர்களுக்கு மட்டுமல்ல... உலகத் தமிழர்களுக்கே பெருமை..

    அவர் சகாயம் அல்ல.. ஒரு சகாப்தம்...

    காந்தீய கொள்கைகளில் அதிக பற்றுடையவர்.. கடமை தவறாத கண்ணியவான்... இன்னும் பெருமைப்படுத்த தமிழில் எத்தனை சொற்கள் உள்ளனவோ.. அத்தனைக்கும் சொந்தக்காரர் அவர் ஒருவரே...!

    நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தது முதல் மதுரை மாவடத்தில் ஆட்சியராக தொடர்ந்து வரை.. அவருடைய அத்தனை செயல்களும், நடவடிக்கைகளும் பாமர மக்களின் நலன் கருதியே அமைந்திருந்தது என்பது அனைவருக்குமே தெரியும்.

    அத்தகைய பெருமைமிக்க அஞ்சா நெஞ்சன்.. அருமை சகோதரர் சகாயம் கலந்துகொள்ளும் விழா உண்மையிலேயே சிறப்பாக நடைபெறும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை..

    விழா சிறப்புற நடைபெற என்னுடைய வாழ்த்துகள்.. !

    ReplyDelete
  9. விழா வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. விழா நிகழ்வுகள் மிக அற்புதமாக நடைபெற்றது.

    பங்கெடுத்த அத்தனை நல் இதயங்களுக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete

உங்கள் ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவியுங்கள் நண்பர்களே!!

உங்களின் ஒவ்வொரு உற்சாகமும் தான் நம்மை மேலும் வேகமாக உந்திச்செல்லும் சக்தியாக இருக்கிறது...