Thursday, December 27, 2012

வலைச்சரம் சீனா அய்யாவுக்கு நன்றி!!

          டிசம்பர் விழாவிற்கும் பதிவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் முதல் பயனை அடைவதில் பெரும் மகிழ்வு கொள்கிறோம்.


வலைசரம் சீனா அய்யாவிற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

     இன்று காலை தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் கு.தங்கராசு அய்யா அவர்கள் அலைபேசியில் அலைத்து சொன்ன விபரமாவது, உங்கள் பார்வைக்கு...

ரூ.5000 நிதியை தாய்த்தமிழ் பள்ளிக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வலைச்சரம் சீனா அய்யா வங்கி காசோலையாக அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் பள்ளியின் சார்பாக தனது நன்றியை வலைப்பதிவர்களுக்கு தெரிவிப்பதாக கூறினார்.

விழாவின் முக்கிய நோக்கமாக தெரிவித்திருப்பதை இவ்விடத்தில் உங்களுக்கு நினைவுருத்துகிறோம்.


இவ்விழாவின் முக்கிய நோக்கம் : 

"  ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க  நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள் என்ற சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்."


       இதில் தொழிற்களம், தமீழ் மீட்சி இயக்கம்  போன்ற இன்னும் பல அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன.


        இவ்விழா மட்டுமல்ல, இனி தொழிற்களம் சார்பாக எவ்வித விழாவை நாம் நடத்துவதாக இருந்தாலும் அவ்விழாவை காரணமாக கொண்டு இணையத்தின் மூலமாக, முகம் தெரியாத பலரையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம். என்பதை மட்டும் நமது சக நண்பர்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.


பதிவர்கள் நாம் நமது பலத்தை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தின் எந்த புள்ளிக்கும் நம்மால் எந்த ஒரு மாற்றத்தையும் உடனடியாக செய்திட முடியும் . 

ஒட்டு மொத்த பதிவர்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக தொழிற்களம் இருக்கும். 

அந்த வகையில், நமது முதல் நிகழ்வை துவங்கியதுமே முதல் ஆளாய் வாழ்த்து தெரிவித்தார் வலைச்சரம் சீனா அய்யா, அவர் தம் அனுபவங்கள் நம்மை இன்னும் சீர்படுத்தும் என்று உணருகிறோம். 

அவரைப்போலவே இன்னும் பல இணைய நண்பர்கள் பெரிய பொக்கிசமாக நமக்கு கிடைத்திருக்கிறார்கள். திண்டுக்கல் தனபாலன், ஜோதிஜி, மெட்ராஸ் பவன் சிவக்குமார், ஆரூர் மூணா, சி.பி.செந்தில்குமார், கவியாலி கண்ணதாசன், பரமேஸ் டிரைவர், வலையகம் அகரன், கோவை நண்பர்கள் சங்கவி, வீடு சுரேஸ்  போன்றோரும் தங்கள் ஆதரவை தெரிவித்து நம்மை மேலும் ஊக்கப்படுத்துகிறார்கள்.

இவ்விழாவில் தாய்த்தமிழ் பள்ளி மாணவர்களை உலகிற்கு கொண்டு செல்ல நம் பதிவர்கள் நம்முடன் துணை நிற்க வேண்டும். 

இவ்விழாவிற்கு பிறகு, உலக தமிழ் பதிவர்கள் மூலமாக கண்டிப்பாக ஒரு மாற்றம் அல்லது உதவி தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு ஏற்படும் என்றும், அவ்வாறே இன்னும் பல பள்ளிகள், திறமைசாலிகளை நாம் உலகிற்கு அடையாளம் காட்ட ஒன்று கூடுவோம் என்றும் நம்புகிறோம். 

- தொழிற்களம் அருணேஸ்
+9 1 95 66 66 12 14

3 comments:

  1. எப்போதுமே பெரியவங்க, பெரியவங்க தான், தொடரட்டும் ஐயா உங்கள் பணி...

    ReplyDelete
  2. அன்பின் சீனா அவர்களின் பங்களிப்பு மிகப் பெரிய ஊக்கம். அவருக்கு தலை வணங்குவோம்!

    ReplyDelete
  3. அன்பின் அருணேஷ் - விழாவில் கலந்து கொள்ள, மிகவும் விரும்பி எல்லா ஏற்பாடுகளும் செய்து - புறப்படும் நேரத்தில் சிறு உடல் நலக் குறைவினால் கலந்து கொள்ள இயலவில்லை. விழா வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

உங்கள் ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவியுங்கள் நண்பர்களே!!

உங்களின் ஒவ்வொரு உற்சாகமும் தான் நம்மை மேலும் வேகமாக உந்திச்செல்லும் சக்தியாக இருக்கிறது...